அமலமரித் தியாகிகள் சபையின் யாழ் மாகாணத்தை சேர்ந்த மூத்த குருக்களில் ஒருவராகிய அருட்தந்தை பிலிப் அவர்கள் கடந்த 11 ஆம் திகதி செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
இவர் கொழும்பு, அனுராதபுரம், சிலாபம், மத்துகம, நீர்கொழும்பு, செட்டிகுளம், மட்டக்களப்பு, பேசாலை ஆகிய இடங்களில் பங்கு பணியாற்றியதுடன் இந்தியாவில் நவசன்னியாச மடத்தலைவராகவும் தென் ஆபிரிக்காவில் அமலமரித்தியாகள் சபை குருமடத்தில் உருவாக்குனராகவும் கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் ஆன்மீக இயக்குனராகவும் யாழ் மாகாண முதல்வராகவும் பல தளங்களில் அளப்பரிய பணியாற்றியுள்ளார்.
அமரத்துவமடைந்த அருட்தந்தை பிலிப் அவர்களின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.