ஆசிய மறைபணி நிலையத்தின் ஏற்பாட்டில் ‘நீதி மற்றும் சமாதானம்’ என்னும் கருப்பொருளில் இளையோருக்காக முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் மறைமாவட்டத்திலுள்ள ஞானோதய ஆரம்ப நவசந்நியாச இல்லத்தில் நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை சேர்ந்த இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் அருட்தந்தை யூட் பெர்ணாண்டோ, அருட்தந்தை ஜெயபாலன் குருஸ், அருட்தந்தை அன்புராசா, அருட்தந்தை மரி டி கோல் ஆகியோர் வளவாளர்களாக கலந்து இக்கருத்தமர்வை நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 33 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.