இவ்வருடம் அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறவுள்ள கூட்டொருங்கியக்க ஆயர் பேரவையின் இரண்டாவது அமர்வுக்கான ஆயத்த செயற்பாடுகளில் ஒன்றாக முன்னெடுக்கப்பட்ட ஆசிய ஆயர் பேரவை மாநாடு இம்மாதம் ஐந்தாம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி வரை தாய்லாந்து நாட்டின் பாங்கொக் நகரில் நடைபெற்றது.
ஆசிய ஆயர் பேரவை தலைவரும் மியான்மார் நாட்டின் பேராயருமான சால்ஸ் கார்டினல் போ அவர்களின் தலைமையில் ‘நற்செய்தி அறிவிக்கும் கூட்டொருங்கியக்க திரு அவையாவது எவ்வாறு’ என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இம்மாநாட்டில் ஆசியாவின் 17 நாடுகளைச் சேர்ந்த கருதினால்கள், ஆயர்கள், குருக்கள், துறவிகள் பொதுநிலையினரென 38 பேர் பங்கு பற்றியிருந்தார்கள்.
வத்திக்கானால் வெளியிடப்பட்ட செயற்பாட்டு அறிக்கையை மையமாகக் கொண்டு நடாத்தப்பட்ட இம்மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதிகளாக காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்ரமசிங்க மற்றும் அருட்தந்தை விமல் திருமான்ன ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
பதினாறாவது உலக ஆயர் மன்றத்தினுடைய இரண்டாவது அமர்வு இவ்வருடம் அக்டோபர் மாதம்
இரண்டாம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை வத்திக்கானில் நடைபெறவுள்ளதுடன் இதன் முதலாவது அமர்வு கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.