அளம்பில், நாயாறு, உடுப்புக்குள பங்குகள் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சுற்றுலா நிகழ்வு 5ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தையர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்கள் றீச்சா சுற்றுலா மையம், இரணைமடு குளம், ஆரோபணம் சிறுவர் இல்லம் போன்ற இடங்களை தரிசித்தனர்.
இச்சுற்றலா நிகழ்வில் 85 வரையான மறைக்கல்வி மாணவர்களும் 13 வரையான மறையாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.