அமலமரித் தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்வு அல்லைப்பிட்டி வெண்புரவி நகரில் 9ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாட்டி திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஏற்பாட்டில் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் 50க்கும் அதிகமான சிறார்கள் பங்குபற்றியதுடன் விளையாட்டுக்கள், குழுசெயற்பாடுகள் என்பன இடம்பெற்றன.