யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான அருட்தந்தை G.A பிரான்சிஸ் ஜோசப் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது துடுப்பாட்ட போட்டி கடந்த 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நாணயசுழற்சியில் தெரிவாகிய யாழ்ப்பாண கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 09 இலக்குகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் 134 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி 19.5 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 06 இலக்குகளை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று 4 இலக்குகளால் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ்ப்பாணக் கல்லூரி அணித்தலைவர் செல்வன் மது~ன் அவர்களும் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் களத்தடுப்பாளராக புனித பத்திரிசியார் கல்லூரி அணியைச் சேர்ந்த செல்வன் சாரு~ன் அவர்களும் சிறந்த ஆட்ட நாயகனாக புனித பத்திரிசியார் கல்லூரி அணித் தலைவர் செல்வன் மதுசன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.