செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் முதற்குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பணியாற்றி இறந்துபோன அருட்தந்தை ஜோண் லொறற் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் மாணவர்களுக்கான ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் அருட்தந்தை ஜோண் லொறற் அவர்களின் நினைவாக ஆலய வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டன.
1995ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை அவர்கள் அதேவருடம் யாழ். குடாநாட்டில் ஏற்பட்ட மாபெரும் இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்டு கொடிகாமம் கச்சாய் பகுதியில் குடியேறிய மக்களுக்கு பணியாற்றி வந்த நிலையில் இவருக்கு ஏற்பட்ட செப்ரிசீமியா நோயினால் பாதிக்கப்பட்டு 1996ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி மரணமடைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.