செபமாலை தாசர் சபையை சேர்ந்த அருட்தந்தை அமிர்தநாதர் பிரான்சிஸ் ஜெயசீலன் அவர்களின் குருத்துவ 25ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு 21ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அருள் ஆச்சிரமத்தில் நடைபெற்றது.
அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து யூபிலி நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தையின் குடும்ப உறவினர்கள் குருக்கள், துறவிகள், இறைமக்களெனப் பலரும் கலந்து கொண்டனர்.


