மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமனம்பெற்ற அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் ஆயர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு 22ஆம் திகதி, சனிக்கிழமை நடைபெற்றது.
ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்ற இத்திருச்சடங்கில் திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறாயன் உடக்குவே, கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் கருதினால் றஞ்சித், ஏனைய மறைமாவட்ட ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.
புதிய ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் மன்னார் மறைமாவட்டத்தை பொறுப்பெடுக்கும் நிகழ்வு 23ஆம் திகதி நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெறவுள்ளது.
ஆயர் பேரருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் மன்னார் மறைமாவட்ட குருக்களிலிருந்து நியமனம்பெற்ற முதலாவது ஆயரென்பதுடன் தனது குருத்துவ உருவாக்கத்தை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திலும் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியிலும் முழுமையாக பெற்றுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.