இலங்கை அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் அருட்சகோதரி றோசலின் அவர்கள் 03ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இவர் 44 வருடங்களாக துறவறவியாக இருந்து இலங்கையின் பல பாகங்களிலும் பங்குப்பணியுடன் கல்விப்பணி ஆற்றியவர். அருட்சகோதரியின் ஆன்மா இறைவனில் அமைதிபெற மன்றாடுவோம்