போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி யக்குலின் ஆசிர்வாதம் அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 25வது யூபிலி ஆண்டு நிகழ்வு 07ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ராஜ் கிளேயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து யூபிலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், இறைமக்களெனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அருட்சகோதரி மேரி யக்குலின் ஆசீர்வாதம் அவர்கள் தற்போது ஆபிரிக்கா கண்டத்தின் உகண்டா நாட்டில் இறை பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.