சொமஸ்கள் துறவற சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி எவரெஸ்ரா திருச்செல்வம் அவர்களின் நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு கடந்த மாசி மாதம் 08ஆம் திகதி மட்டக்களப்பு தன்னாமுனையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்களின் தலைமையில் தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் அருட்சகோதரி மேரி எவரெஸ்ரா திருச்செல்வம் அவர்கள் தனது நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றினார்.
அத்துடன் அருட்சகோதரியின் நித்திய அர்ப்பண நன்றி திருப்பலி 19ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அவரின் பிறப்பிடமாகிய எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கமில்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி உருவாக்குநரும் அவரின் சகோதரருமான அருட்தந்தை குயின்சன் அவர்கள் தலைமைதாங்கி நன்றித்திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
தொடர்ந்து அருட்சகோதரிக்கான கௌரவிப்பு இடம்பெற்றன. இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், அருட்சகோதரியின் உறவினர்கள், பங்குமக்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அருட்சகோதரி மேரி எவறெஸ்ரா திருச்செல்லவம் அவர்கள் யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது சொமஸ்கன் துறவற சபை அருட்சகோதரி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.