நாட்டில் நிலவிவரும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும் பொறுப்பற்ற தற்போதைய அரசாங்கத்தின் ஊழலையும் அவர்களின் அசமந்தபோக்கினையும் கண்டித்து மக்கள் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப்போராட்டங்களில் மதப்பெரியார்களும் மக்களோடு இணைந்து அரசுக்கு எதிராக தமது எதிர்பை தெரிவித்து வருகின்றனர். தென்னிலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் அரச எதிர்ப்பு போராட்ங்களில் கடந்த 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பேராயர் இல்லத்திற்கு முன்பாக நடைபெற்ற பேராட்டத்தில் பேராயர் மல்கம் காடினல் றஞ்சித் உள்ளிட்ட அருட்தந்தையர்கள், துறவிகள் மற்றும் அருட்சகோதரிகள் இணைந்துகொண்டார்கள்.