அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் யாழ் பிராந்திய சமயக் கல்விக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பிள்ளைகள் விழா அருட்பணியாளர் சுதாஜினி அவர்களின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை சாவகச்சேரி, டிறிபேக் கல்லூரியில் நடைபெற்றது.

யாழ் பிராந்தியத்தில் இயங்கும்; திருச்சபைகள் கலந்து கொண்ட இந்நிகழ்வு சாட்சியப் பவனியுடன் ஆரம்பமாகி வழிபாடு இடம்பெற்றது.

தொடர்ந்து திருச்சபைகளுக்கிடையிலான குழுப்பாடல், வேதாகமப்புதிர்ப் போட்டிகள் நடைபெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

By admin