அமலமரித்தியாகிகள் சபை குடும்ப பணியகத்தால் முன்னெக்கப்பட்ட ஒளிவிழா கடந்த மாதம் 30ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய மத்தாயஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

பணியக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஸ்ரனி அன்ரனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் கைவிடப்பட்ட மாணவர்கள் மற்றும் தாய்மார்களுக்கான அன்பளிப்புக்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

By admin