யாழ். திருமறைக்கலாமன்ற ஸ்தாபக இயக்குர் அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அன்றைய தினம் காலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலாமுற்றத்தில் திருப்பலியும் தொடர்ந்து மாலை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நினைவுப்பேருரையும் இடம்பெற்றன.

யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நினைவுப் பேருரை நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை முன்னாள் தலைவரும், ஓய்வுநிலை பேராசிரியருமான திருமதி. கிருஸ்ணவேணி அவர்கள் கலந்து “அழகியல்: ஓர் ஆன்மீக நோக்குநிலை” என்னும் தலைப்பில் பேருரையை வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், தமிழ் ஆர்வலர்கள், மன்ற அங்கத்தவர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin