அமரர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் பணிவாழ்வை நினைவுகூரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட “பத்திநாதம்” நினைவு மலர் வெளியீட்டு நிகழ்வு 07ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
நெய்தலம் இயக்குநர் அருட்தந்தை அமிர்த பிரான்சிஸ் ஜெயசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் மற்றும் திருக்குடும்ப சபை மாகாண முதல்வி அருட்சகோதரி தியோபின் குருஸ் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், உறவினர்கள், பங்குமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.