இலங்கையின் பல பாகங்களிலும் பணியாற்றி வரும் அப்போஸ்தலிக்க கார்மேல் துறவற சபையினர் இலங்கையின் தமது பணியை ஆரம்பித்ததன் நூற்றாண்டு விழாவை 5ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கொண்டாடினர்.
யாழ் றக்கா வீதியில் அமைந்துள்ள புனித தெரேசாள் ஆலயத்தில் நடைபெற்ற இந் நூற்றாண்டு விழா நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் நூற்றாண்டு விழா திருப்பலியை ஓப்புக் கொடுத்தார். திருப்பலியைத் தொடர்ந்து நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வுகள் யாழ் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. புனித கார்மேல் துறவற சபையினர் 1922 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி திருகோணமலை மறைமாவட்டத்தில் தமது பணியை ஆரம்பித்து இலங்கையில் பல பாகங்களிலும் 32 கார்மேல் துறவற இல்லங்களை அமைத்து பணியாற்றி வருவதுடன் யாழ் மறைமாவட்டத்தில் 7 துறவற இல்லங்களில் பணியாற்றி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் கல்விப்பணி அத்துடன் பங்குப்பணிகளுடன் இரக்கச் செயல்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.