அப்போஸ்தலிக்க கார்மேல் சபை நிறுவுனர் அன்னை வெரோணிக்காவின் 200ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருட்சகோதரிகளின் வழிகாட்டலின் கீழ் இயங்கிவரும் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கடந்த மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை கம்பஹாவில் அமைந்துள்ள திருச்சிலுவை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
சபையின் மாகாண தலைவி அருட்சகோதரி மேரி நிலாந்தி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்வி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அருட்சகோதரி நிமல்கா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 18 பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட பாடல், நடனம், பேச்சு, நாடகம், கவிதை, கட்டுரை, நாடக மற்றும் நிகழ்ச்சி தொகுப்பு எழுத்துருவாக்கம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மற்றும் துடுப்பாட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குருநாகல் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஹரல்ட் அன்ரனி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.