மன்னார் மறைமாவட்ட பங்குகளில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய வார சிறப்பு நிகழ்வுகள் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை நடைபெற்றன.
பங்குகளில் அன்பியக் கொடிகள் ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட அன்பியவாரத்தில் அன்பிய வழிபாடுகள், அன்பிய திருப்பலிகள், சிரமதானம், உணவு பகிர்வு, கள அனுபவ பயணங்கள், கலைநிகழ்வுகள், அன்பிய அர்ப்பணத்தை புதுப்பித்தல் போன்றவை இடம்பெற்றன.
இவ்வாரத்தின் சிறப்பு நிகழ்வாக அன்பிய மத்திய குழுவின் ஏற்பாட்டில் அந்தோனியார்புரம், பள்ளிமுனை, ஆத்திக்குழி, கீரி, மகாறம்பைக்குளம் மற்றும் பேராலய பங்கு மாணவர்களுக்கள் மற்றும் அன்பிய பணியாளர்களுக்கான கருத்தமர்வும் இடம்பெற்றன.