யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய நாள் சிறப்பு நிகழ்வு கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் அன்பிய நாள் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அன்பிய ஊக்குவிப்பாளர்களின் அர்ப்பண வார்த்தைப்பாட்டை புதுப்பிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
திருப்பலியை தொடர்ந்து அன்பிய உணவுப் பகிர்வும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.