ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட அன்னையர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எசன் மாநகரில் நடைபெற்றது.

இவ்வருடம் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த அன்னையர் ஆண்டின் சிறப்பு நிகழ்வாக ஆன்மீக பணியக இயக்குனர் அருட்தந்தை நிருபன் நிசாந் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை ஜெயபாலன் குருஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மெய்வெளி தொலைக்காட்சி இயக்குனர் திரு. சாம் பிரதீபன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் அன்னையர் கௌரவிப்பு, ‘புலம்பெயர் வாழ்வில் அன்னையர்கள் ஆதரிக்கப்படுகிறார்களா? அந்தரிக்க விடப்படுகிறார்களா?’ எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் என்பவற்றுடன் வில்லுப்பாட்டு, நடனம், நாடகம் என்பனவும் இடம்பெற்றன.

 

By admin