அச்சுவேலியில் அமைந்துள்ள அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் அப்போஸ்தலிக்க கார்மேல் கல்லூரியில் கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 18ஆம் திகதி புதன்கிழமை அச்சுவேலி புனித திரேசாள் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி இயக்குநர் அருட்சகோதரி திரேஸ்ராணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்திரநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கிளறேசியன் சபை அருட்தந்தை அல்பிரட் ஜோசப் அருள்ராஜா மற்றும் அப்போஸ்தலிக்க கார்மேல் சபை ஆன்மீக ஆலோசகர் அருட்சகோதரி சுனித்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.