தவக்காலத்தில் செபத்தின் வழியாக நாம் பாவ வாழ்விலிருந்து விடுபட்டு மனம் மாறியவர்களாக பிறரன்பு பணிகளில் ஈடுபட்டு முனையவேண்டுமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள தவக்கால சுற்றுமடலில் அழைப்பு விடுத்துள்ளார்.

இச்சுற்றுமடலில், தவக்காலம் இறைவேண்டல், உண்ணா நோன்பு, தர்மம் போன்ற விடயங்களை எமக்கு ஞாபகப்படுத்துவதை சுட்டிக்காட்டி தவக்காலத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான விடயங்களையும் விபரித்துள்ளார்.

இக்காலத்தில் செபத்தின் வழியாக நாம் பாவ வாழ்விலிருந்து விலகி மனம் மாறியவர்களாக பிறரன்பு பணிகளில் ஈடுபட்டு, பிறர் மட்டில் உள்ள கோப உணர்வுகளை களைந்து, வீண் விமர்சனங்கள், ஆவலாதி அவதூறுப் பேச்சுக்களை தவிர்த்து மன்னித்து, மறந்து, நேசித்து வாழ்வோமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாம் செபிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் எமது செபவாழ்வின் தரத்தை உயர்த்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளதுடன் உயிர்ப்பு பெருவிழாவை மகிழ்வுடனும் தகுதியுடனும் கொண்டாட எம்மை இந்நாட்களில் தயார் செய்வோமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

 

 

By admin