மல்வம் திருக்குடும்ப ஆலய மரியாயின் சேனையினரால் முன்னெடுக்கப்பட்ட பிரசீடிய விழா பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிநடத்தலில் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியைத் தொடர்ந்து அன்று மாலை மரியாயின் சேனை அங்கத்தவர்கள் மாதகல் லூர்து அன்னை கெபிக்கு களஅனுபவ பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுபாட்டிலும், கருத்துப் பரிமாற்றத்திலும், கலைநிகழ்வுகளிலும் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் மாதகல் பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் 30ற்கும் அதிகமான மரியாயின் சேனை உறுப்பினர்கள் கலந்து பயனடைந்தனர்.