மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி 14ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான குருத்துவ வாக்குறுதிகளை புதுப்பிக்கும் திருச்சடங்கும் நடைபெற்றன.
இத்திருப்பலியில் குருக்கள் துறவிகள் அருட்சகோதர்கள் இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.