தர்மபுரம் பங்கிலுள்ள பேய்ப்பாறைப்பிட்டி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 19ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.திருவிழா திருப்பலியை புனித சவேரியர் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை புனித சவேரியர் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை யஸ்ரின் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருபம் படகு பவனியாக கடலுக்குள் எடுத்துச்செல்லப்பட்டு ஆசீர்வாதமும் நடைபெற்றது.