நெடுந்தீவு புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் தலைமையில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
17ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 19ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை புனித பத்திரிசியார் கல்லூரி விடுதிப்பொறுப்பாளர் அருட்தந்தை துஸ்யந்தன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.