தும்பளை புனித மரியாள் முன்பள்ளி சிறார்களால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித மரியாள் ஆலய முன்றலில் நடைபெற்றது.
புனித மரியாள் சனசமூக நிலைய தலைவர் திரு. கட்சன் அனோஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. சத்தியசீலன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களும் பருத்தித்துறை கிழக்கு கிராம அலுவலகர் திரு அபராஜிதன் அவர்களும் சமூக சேவையாளர் திரு டக்ளஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.