தேசிய திருவழிபாட்டு மாநாடு வருகின்ற புரட்டாதி மாதம் கண்டியில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான ஆயத்தங்கள் மறைமாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

யாழ். மறைமாவட்டத்தில் மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட ரீதியாக நடைபெறும் இவ் ஆயத்த செயலமர்வுகளில் தீவக மறைக்கோட்ட செயலமர்வு கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

தீவக மறைக்கோட்ட திருவழிபாட்டு இணைப்பாளர் அருட்தந்தை யூட் கமில்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை றெக்னோ அவர்களின் தலைமையில் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை ஜெயபாலன் குருஸ் அவர்கள் கலந்து நற்கருணை நம்பிக்கையின் மறைபொருள், நற்கருணை ஓரு கொண்டாட்டம் என்னும் தலைப்புக்களில் கருத்துரை வழங்கினார்.

தொடர்ந்து கலந்துரையாடலும் மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதிநிதிகள் தெரிவும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், தீவக மறைக்கோட்ட பங்குகளின் பிரதிநிதிகளென 90 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin