குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் அருட்சாதன திருப்பலியில் 113 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.