மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தை சேர்ந்த குருக்கள் துறவிகள் மற்றும் பக்திசபையினருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு 21ம் திகதி கடந்த திங்கட்கிழமை மண்டைதீவு அணுசா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
புனித பேதுருவானவர் தற்போதைய ஆலயத்தின் 125ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. அதற்கான முன்னாயத்த பணிகளை மேற்கொள்ளு முகமாக இவ் ஒன்றுகூடல் மண்டைதீவு பங்குத்தந்தை அருட்திரு டேவிற் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.