யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கபட்ட தேசிய ரீதியிலான கத்தோலிக்க விவிலியத் தேர்வு 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.
மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தரம் 04 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களுக்கு யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, இளவாலை திருக்குடும்ப மகாவித்தியாலயம், கிளிநொச்சி புனித திரேசாள் மகாவித்தியாலயம், முல்லைத்தீவு மகாவித்தியாலயம் ஆகிய 04 நிலையங்களில் நடைபெற்ற இப்பரீட்சையில் மறைமாவட்ட ரீதியாக பரீட்சைக்குத் தோற்றி வெற்றி பெற்ற 900ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.