தர்மபுரம் பங்கிற்குட்பட்ட பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா இம்முறை எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெறவுள்ளது.
யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் காலை 7 மணிக்கு திருநாள் திருப்பலி நிறைவேற்றப்படவுள்ளது. இந்நாள் ஆயர் அவர்களின் 48வது குருத்துவ நாளாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆயத்த நாள் வழிபாடுகள் 18ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி தினமும் மாலை வழிபாடுகள் நடைபெற்று நற்கருணை விழாத் திருப்பலி 23ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும். பிரமந்தனாறு இறைஇரக்க ஆண்டவர் ஆலயம் யாழ். மறைமாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாக அமைந்துள்ளதுடன் யுத்தகாலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஆலயமாக இவ்வாலயம் அமைந்துள்ளது. இலங்கையில் முதன்முதலில் இறைஇரக்க பக்தி யாழ். மறைமாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட போது முதலாவதுஇறைஇரக்க ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதும் இவ்வாலயத்திற்குதான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது