மன்னாரில் அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 40ஆவது ஆண்டு நினைவுநாள்
மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் வைத்து இலங்கை அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 40ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அருட்தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட வங்காலை புனித அன்னாள்…
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராளிகள் நலன்புரி சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் கடந்த 06ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடம் முன்பாக நடைபெற்றது. வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கி ஆறு…
மானிப்பாயில் அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 40ஆவது ஆண்டு நினைவு
மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் இலங்கை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 40ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு மானிப்பாய் புனித அன்னாள் ஆலய அருட்தந்தை மேரி பஸ்தியன் நிதியத்தினரினால் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வு கடந்த 05ஆம் திகதி…
வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் புனித கதவு வழியாக 5 இலட்சத்துக்கும் அதிகமான திருப்பயணிகள்
மார்கழி மாதம் 24ஆம் திகதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் திறந்துவைக்கப்பட்ட புனித கதவு வழியாக கடந்த இருவாரத்தில் 545, 532 பேர் கடந்து சென்றுள்ளதாக யூபிலி அலுவலகத்திற்கு பொறுப்பான நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடத்துறையின் இணைத்தலைவர் பேராயர்…
திருப்பீடத்துறை ஒன்றின் தலைவராக இத்தாலிய பெண்துறவி Simona Brambilla
திருஅவை வரலாற்றில் முதன்முறையாக பெண் துறவறத்தார் ஒருவர் திருப்பீடத்துறை ஒன்றின் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமனம் பெற்றுள்ளார். கொன்சலாத்தா மறைப்பணி துறவுசபையைச் சேர்ந்த இத்தாலிய பெண்துறவி Simona Brambilla அவர்களை, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு நிறுவனங்கள் மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வு அமைப்புக்களுக்கான…