TS3 தாதியர் மற்றும் நோயாளர் பராமரிப்பு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிறுவன பணியாளர் கௌரவிப்பு நிகழ்வு 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
நிறுவன இயக்குனர் திரு. ராமசாமி துசாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு. செல்வராசா சுதர்சன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அருட்தந்தை அன்ரன் ஸ்ரீபன், தனேஸ்குமார், சத்தியபாமா, இராமசாமி இராயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிழ்வில் நிறுவனத்தில் கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பணியாளர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள் .
இந்நிறுவனம் திரு. ராமசாமி துசாந்தன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு முதியோர் மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவையை 35 பணியாளர்களுடன் தாயகத்தில் ஆற்றி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.