இரத்ததான நிகழ்வு
பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோதிநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 21 வரையான குருதிக்கொடையாளர்கள்…
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
யாழ். புனித வளன் கத்தோலிக்க அச்சகத்தில் நீண்டகாலமாக பணியாற்றிவந்த திரு. பாலேந்திரன் அவர்கள் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். முப்பத்தைந்து வருடங்களாக கத்தோலிக்க அச்சகத்தின் மேற்பார்வையாளராக சேவை மனப்பான்மையோடு இவர் அளப்பரிய பணியாற்றியுள்ளார். அன்னாரின் வாழ்விற்காக ஆண்டவருக்கு நன்றிகூறி…
#CATHOLIC NEWS JAFFNA DIOCESE 20.04.2024. YARL MARAI ALAI TV. NEWS EDITOR REV. FR. A. #ANTON STEPHEN
https://youtu.be/BS3pPetHpMs
யாழ். மறைமாவட்ட பங்குகளிற்கு மருதமடு அன்னையின் திருச்சுருபம்
மன்னார் மருதமடு அன்னையின் திருச்சுருபம் யாழ். மறைமாவட்டத்தின் பருத்தித்துறை மறைக்கோட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு கடந்த 17ஆம் திகதி தொடக்கம் பங்குரீதியாக மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு திருப்பலிகளும் நற்கருணை ஆராதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வணக்க நிகழ்வுகளிலும் அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் வழிபாடுகள் மற்றும் சிறப்பு…
ஆசிய ஆயர் பேரவையின் காலநிலை மாற்றத்திற்கான அவையத்தின் சூழலியல் மாநாடு
ஆசிய ஆயர் பேரவையின் காலநிலை மாற்றத்திற்கான அவையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சூழலியல் மாநாடு கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸ் நாட்டின் தகாய்தே நகரத்தில் நடைபெற்றது. இயற்கை அனர்த்தங்களை கட்டுப்படுத்தும் காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் சிறு குழுமங்களை…