பசாம் பாடல் போட்டி மதிப்பீடு
யாழ். மறை அலை தெலைக்காட்சியினால் இவ்வருடம் நடாத்தப்பட்ட பசாம் பாடல் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கான மதிப்பீட்டு நிகழ்வு கடந்தவாரம் மறைநதி கத்தோலிக்க ஊடகமையத்தின் ஆயர் யஸ்ரின் கலையகத்தில் நடைபெற்றது. இப்பசாம் போட்டியில் 37 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்த நிலையில் இப்போட்டியாளர்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு…
இரத்ததான முகாம்
குருநகர் ஜேம்ஸ் வோரியர்ஸ் இளையோர் சமூக முன்னேற்ற கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கழக தலைவர் திரு. இயல் றொன்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குருநகர் பங்குத்தந்தை…
ஆயருடனான சந்திப்பு
கரித்தாஸ் கியூடெக் நிறுவன நோர்வோ நாட்டு பிரதிநிகள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கடந்த 06ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
திருப்பாலர் சபை ஒன்றுகூடல்
வவுனியா மறைக்கோட்ட பங்குகளின் திருப்பாலர் சபை சிறார்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 04ஆம் திகதி சனிக்கிழமை இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட பாப்பிறைகளின் சபை இயக்குநர் அருட்தந்தை தயாளன் கூஞ்ஞ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு
மன்னார் மறைமாவட்டத்தில் நான்கு புதிய குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பிலியில் மன்னார் மறைமாவட்டத்தை…