இலங்கையில் பணியாற்றும் Holy Angels அருட்சகோதரிகளால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் கடந்த 10,11ஆம் திகதிகளில் நடைபெற்றது.
சபை முதல்வரின் செயலர் அருட்சகோதரி அலெக்சாண்றா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரிகள் யாழ்ப்பாண மறைமாவட்டத்தை தரிசித்து கிளிநொச்சி, முல்லைத்தீவு, அளம்பில், சில்லாலை கதிரை அன்னை ஆலயம், புனித யோசேவாஸ் திருத்தலம், பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலம், யாழ்ப்பாணம் கோட்டை, மொண்பேர்ட் சர்வதேச பாடசாலை, யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமையம், யாழ்ப்பாணம் நல்லூர் தொல்பொருட் காட்சிச்சாலை ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் 08 வரையான அருட்சகோதரிளும் உருவாக்கம்பெற்றுவரும் மாணவிகளும் பங்குபற்றியிருந்தனர்.