யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பட்டில் முன்னெடுக்கப்பட்ட HAPPY DAY நிகழ்வு 6ஆம் திகதி சனிக்கிழமை இன்று கல்லூரியில் நடைபெற்றது.
மாணவர்களின் வகுப்பறைக்கு அப்பாலான கல்வி செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் சந்தை நிகழ்வு, புத்தக விற்பனை, பொது அறிவு போட்டிகள், விளையாட்டுக்கள், அனைவருக்குமான இலவச கண்பரிசோதனை மற்றும் திரைப்பட காட்சிகள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் மாணவர்கள், பெற்றோர்கள், பெருமளவான மக்கள் பங்குபற்றினார்கள்.