Author: admin

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ

நவ.22,2017. இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராகப் பணியாற்றிய, ஆயர் பிதேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னான்டோ (Fidelis Lionel Emmanuel Fernando) அவர்களை, இப்புதனன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பாராமுகமாக இருப்பதே, வறியோருக்கு எதிரான பெரும் பாவம்

நவ.20,2017. உதவி தேவைப்படும் நிலையிலுள்ள நம் சகோதர, சகோதரிகள் குறித்து பாராமுகமாக இருப்பதே, வறியோருக்கு எதிரான மிகப்பெரும் பாவம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று தன் மறையுரையில் கூறினார்.

தலைமைத்துவ பயிற்சி பெற்ற இளையோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

நவ.20. யாழ்ப்பாணம் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினால் கடந்த மாதம் நடத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சியில் பங்குபற்றிய இளையோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மறைகல்வி நிலையத்தில் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்பணி. அன்ரன் ஸ்ரிபன் தலைமையில் நடைபெற்றது.

திருமறை கலாமன்றத்த தயாரித்த மஹாகவியின் புதியதொரு வீடு நாடகம்

நவ.18. திருமறை கலாமன்றம் தயாரித்து வழங்கிய மஹாகவியின் புதியதொரு வீடு நாடகம் 18.11.2017 (சனி ) காலை 09.00மணி, 11.00மணி, மாலை4.00 மணி என மண்டபம் நிறைந்த மூன்று காட்சிகளாக யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் மேடையேற்றப்பட்டு பலராலும்…

‘இதோ உங்கள் அரசன்’ நூல் வெளியீடு

நவ. 18. கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் 42வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிறிஸ்து அரசர் ஆலய இளையோர் ஒன்றியத்தினால் இவ் ஆலயத்தின் வரலாற்றை நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்ட ‘இதோ உங்கள் அரசன்’ நூல் வெளியீடு செய்யப்பட்டது.