Author: admin

‘கலை ஞான சுரபி’ தியான மண்டப திறப்புவிழா

டிச 02. இல. 17 மார்டின் வீதியில் அமைந்துள்ள ‘கலை ஞான சுரபி’ தியான மண்டபம், யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்னம் அடிகளாரால் இன்று காலை ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.

திருத்தந்தையின் மறையுரை: நற்செய்தியாக வாழும் இளையோர்

நவ.30,2017. அன்பு இளையோரே, மியான்மாரில் என் பயணம் நிறைவுறும் வேளையில், இளையோராகிய உங்களுடன் சேர்ந்து இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். இளையோராகிய உங்களைக் காணும்போது, இன்றையத் திருப்பலியின் முதல் வாசகத்தில், புனித பவுல், உரோமையருக்கு எழுதிய சொற்கள் எனக்குள் எதிரொலிக்கின்றன: “நற்செய்தி அறிவிப்போரின்…

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஆயர் அபிசேக இரண்டாம் ஆண்டு

நவ 28. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஆயர் அபிசேக இரண்டாம் ஆண்டு நிகழ்வுகள் இன்று யாழ் ஆயர் இல்லத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆயர் தலைமையில் நன்றி திருப்பலி ஆயர் இல்லத்தில் ஒப்புகொடுக்கப்பட்டது.

கத்தோலிக்க இளைஞர்களின் 71வது தேசிய மாநாடு

நவ.28. இலங்கை கத்தோலிக்க இளைஞர்களின் 71வது தேசிய மாநாடு மன்னார் மடுமாதா திருத்தலத்தில் நவம்பர் 24,25,26 திகதிகளில் நடைபெற்றது. ஆரம்பநாளில் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் வருகைதந்திருந்த சிங்களம் மற்றும் தமிழ் பேசுகின்ற இளைஞர் இளம் பெண்கள் பலர் மடுத்தாயாரின் திருச் சந்தியிலிருந்து…