மன்னார் மறைமாவட்டம் தட்சனாமருதமடு பங்கின் துணை ஆலயமான முள்ளிக்குளம் புனித சின்ன தெரேசா ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாயல திறப்பு விழா கடந்த 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை கரன்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் அமலமரித் தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக், மன்னார் மடுத்திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் மற்றும் குருக்கள், துறவிகள்
இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2024/04/10-1.jpg)