மல்கம் கர்தினால் றஞ்சித் அவர்களின் ஊடக பேச்சாளரும் ஞானர்த்தபிரதீப பத்திரிகையின் ஆசிரியருமாகிய அருட்தந்தை சிறில் காமினி பெர்னான்டோ அவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளார்.
19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றையதினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட அருட்தந்தை அவர்கள் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.