ஆன்மீக புதுப்பித்தலை நோக்காக கொண்டு இளவாலை பங்கைச் சேர்ந்த போர்டோவின் திருக்குடும்ப பொதுநிலை அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைத்தீவில் நடைபெற்றது.
அருட்சகோதரி மரியா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு கொக்கிளாய் புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து முகத்துவாரம் மடு மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருளடையாளம் மற்றும் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஸ்ரனிஸ்லஸ் அவர்களின் தியான உரை என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 30 வரையான பொதுநிலை அங்கத்தவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.