கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாக, கச்சதீவின் தற்போதைய நிலைமைகள் குறித்து கண்டறிவதற்காக விசேட குழுவொன்று 16ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.
இவ்விஜயத்தில் காணி நடவடிக்கைகளுக்கான யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. சிறீ மோகன், நெடுந்தீவு பிரதேச செயலர் திரு. சத்தியசோதி, நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன், யாழ். மாவட்டசெயலக பிரதம கணக்காளர் மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.
இவ்விஜயத்தில் திருவிழாவிற்கு வரும் மக்களின் உணவு, குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு போன்ற தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

By admin