18ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் சிறப்பு நிகழ்வாக முன்னெடுக்கபட்ட இரு இறையியல் கல்லூரிகளின் சந்திப்பு நிகழ்வு ஒன்றிப்பு வாரத்தின் முதல் நாளன்று மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் நடைபெற்றது.
கிறிஸ்தவ இறையியல் கல்லூரி அதிபர் அருட்பணியாளர் கமலக்குமாரன் மற்றும் புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், “கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளின் வரலாறு” எனும் தலைப்பில் அருட்தந்தை ஜெராட் சவரிமுத்து சிற்றுரை வழங்கினார்.
தொடர்ந்து மாணவர்களும் விரிவுரையாளர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறும் “கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில்” யாழ். குடாநாட்டிலுள்ள இரண்டு இறையியல் கல்லூரி சமூகத்தினரும் இணைந்து, தம்மிடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பை முன்னெடுத்துவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin