மன்னார் மடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு யூபிலி விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சுருபம் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பங்குகளுக்கு பவனியாக எடுத்துச்சொல்லப்பட்டு சிறப்பு வழிபாடுகளும் பக்திமுயற்சிகளும் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவெல் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் தலைமையில் திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் உதவியுடன் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மடுத்திருத்தலத்திலிருந்து ஆரம்பமாகிய இப்பவனியில் இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றி அன்னையின் ஆசீரை வேண்டிவருவதுடன் அன்னையின் திருச்சுருபம் வைக்கப்படும் ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு திருப்பலிகளிலும் வழிபாடுகளிலும் பங்குபற்றிவருகின்றனர்.
இப்பவனி இம்மாதம் 26ஆம் திகதி வரை நடைபெற்று தொடர்ந்து அன்னையின் திருச்சுருபம் மாசி மாதம் நடைபெறும் அன்னையின் திருவிழாவிற்காக மடுத்திருத்தலத்தில் வைக்கப்பட்டு தொடர்ந்து ஏப்பிரல் மாதம் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு எடுத்துச்செல்லப்பட்வுள்ளது.
1924ஆம் ஆண்டு ஆடி மாதம் 2ஆம் திகதி மருதமடு திருப்பதியில் ஆயர்கள் சூழ மருதமடு அன்னைக்கு முடிசூட்டு விழா இடம்பெற்றது. இந்நிகழ்வின் நூற்றாண்டு யூபிலி பெருவிழாவாக இவ்வருடம் ஜூலை மாதம் கொண்டாடப்படவுள்ள திருவிழா அமையவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin