யாழ். மறைமாவட்ட குருவும் பிரமந்தனாறு புன்னைநீராவி ஆங்கில வளாகத்தின் நிறுவுனருமாகிய அமரர் அருட்திரு எட்வின் சவுந்தரா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை தர்மபுரம் மற்றும் குளமங்கால் பங்குகளில் நடைபெற்றன.
தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் புன்னைநீராவி ஆங்கில வளாகத்திலும் குளமங்கால் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனித சவேரியார் ஆலயத்திலும் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் திருப்பலிகளும் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அமரர் அருட்திரு எட்வின் சவுந்தரா அவர்கள் புனித சவேரியார் குருத்துவக்கல்லூரியில் பல ஆண்டுகள் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளதுடன் 1995ற்கு பிற்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்து அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மறைமாவட்டத்தில் இணைந்து அங்கும் கற்பித்தல் பணியில் தன்னை இணைத்துக்கொண்டவர். புலம்பெயர் தேசத்திலிருந்து நாடு திரும்பி வன்னிப் பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களின் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்தும் நோக்கோடு தனது முயற்சியினால் பிரமந்தனாறு புன்னைநீராவி பிரதேசத்தில் ஆங்கிலக் கல்விக்கூடம் ஒன்றை நிறுவி ஆங்கிலக் கல்வியை கற்பித்து வந்ததுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin