திருகோணமலை மறைமாவட்டம் புனித குவாடலூப்பே அன்னை திருத்தலத்தில் பல வருடங்களாக மூடப்பட்டிருந்தருந்த பணிமனையின் பாதுகாப்பு பெட்டகம் 03ஆம் திகதி கடந்த புதன்கிழமை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் அனுமதியுடன் திறக்கப்பட்டது.
பங்கு மக்களின் உதவியோடு வெட்டி திறக்கப்பட்ட இப்பெட்டகத்தில் 9 புனிதர்களின் புனிதப்பண்டங்கள் அடங்கிய பேழைகளும், செல்வநாயகபுரம் புனித வனத்து அந்தோனியார் ஆலயத்துக்கு சொந்தமான தங்கச்சங்கிலியும் கிடைக்கப் பெற்றுள்ளதென பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இத்திருத்தலம் இயேசு சபை குருக்களால் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவர்களின் பாரம்பரியத்தின் படி 1977ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இப்பெட்டகம் அமைக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் பங்குத்தந்தை அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

By admin